Thursday, June 26, 2008

பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 1


“The way up and the way down are one and the same”

- Heraclitus

"இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்
ஒன்று
ஊஞ்சலில் நின்றும் உட்கார்ந்தும்
ஒற்றைக் காலைத்தூக்கியும்
வேகமாக வீசி ஆடியும்
ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக் கொண்டும்
ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?"
- முகுந்த் நாகராஜன்

அறுபதுகளின் காலக்கட்டம். அமெரிக்க ஊடகங்கள் அறுபதுகள்(1960s) என்பதை 1963ல் இருந்து 1973வரையிலான காலகட்டத்தயே குறிப்பிடவதாக கூறுகின்றன. வியட்னாம் யுத்தம் குறித்த அதிருப்தி, எதிர்க்கலாச்சார அலைகள் போன்றவை அங்கு மேலோங்கி இருந்த காலக்கட்டம். 1950களின் முடிவில் அடுத்தடுத்து வெளிவந்த ‘பீட் எழுத்தாளர்களின்' புத்தகங்கள்(கின்ஸ்பர்கின் ‘Howl', வில்லியம் பரோஸின் ‘Naked Lunch', ஜாக் கெரோஆக்கின் ‘On the Road' போன்றவை) அறுபதுகளில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை செலுத்தி வந்தன. ஹிப்பி(Hippie) அலை மேலோங்கி இருந்ததும் அக்காலகட்டத்திலேயே. கட்டற்ற சுதந்திரம், இயற்கையோடு ஒன்றியிருத்தல், எவ்வித வன்முறைக்கும் எதிராக குரல் கொடுத்தல், எவ்வித இலட்சியவாதத்தோடும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருத்தல் போன்றவையே ஹிப்பி அலையின் சாரமாக இருந்தது. 'Make love, Not war' என்பது இவர்கள் பிரபலப்படுத்திய ஒரு சொற்றொடர். ஒருவகையில் கிழக்கத்திய நுண் இறைவாதம் (Eastern Mysticism), ஸென் பௌத்தம் போன்றவைகளை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியதும் இவர்களே.

அன்று பல அமெரிக்க இளைஞர்களை ஆட்கொண்ட பெரும்கனவு அது. பல்கலைக்கழகங்களில் இருந்து அலைஅலையாக ஒரு முதுகுப்பையை மட்டும் மாட்டிக் கொண்டு ஓரு இடத்தில் இருந்து மற்றொரு இடமாக அலைந்தார்கள். மெஸ்கலைனும், எல்எஸ்டியும் உட்கொண்டு மராக்கேஷ் எக்ஸ்பிரஸைப்(Marrakesh Express) பிடித்து மொரோக்கோவிற்க்கு சிலர் போனார்கள். கித்தாரில் பாப் திலானயும்(Bob Dylan), பீடில்ஸையும்(The Beatles), டோர்ஸையும்(The Doors) வாசித்துக் கொண்டு சிலர் கோவாவில் உள்ள ஆரம்போலுக்கும், அஞ்ஜுனாவுக்கும் சென்றார்கள்.

அறுபதுகளின் மத்தியில் உச்சத்தில் இருந்த ஹிப்பி அலை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேய்வுர ஆரம்பித்தது. பலர் அதிருப்தியோடு அமெரிக்காவிற்கே திரும்பி வர ஆரம்பித்தார்கள்.

இதன் உச்சமாக ஒரு நிகழ்வு டிசம்பர் மாதம் 1969ஆம் ஆண்டு நடந்தது. ‘வுட்ஸ்டாக் திருவிழா' (Woodstock Festival) என்பது வருடந்தோரும் நியூயார்க்கில் உள்ள பெத்தல்(Bethel) என்னும் இடத்தில் நடக்கும் ஒரு மாபெரும் இசைத் திருவிழா. ஒரு முக்கியமான எதிர்க்கலாச்சார நிகழ்வு அது. ஹிப்பிக்களுக்கு ஒரு மெக்கா போல். நான்கைந்து லட்சத்திற்கு மேல் பார்வையாளர்கள் கூட்டம். பல பிரபல ராக் இசைப் பாடகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் கூடும் திருவிழா. ஹிப்பிக்களின் 'கட்டற்ற சுதந்திரம்', ‘மனவிரிவு' , ‘உலக அமைதி', 'மானுடம் நோக்கி விரியும் அன்பு' போன்றவற்றுக்கு ஒரு வெளிவடிவம் போல அமைவது அந்த விழாவே. நியூயார்க்கில் நடந்த அந்த விழா மாபெரும் வெற்றியடைய அதே போல் ஒரு விழாவை கலிபோர்னியாவில் உள்ள அல்டாமோண்ட்டில்(Altamont) நடத்த முடிவு செய்தார்கள். 'வுட்ஸ்டாக் வெஸ்ட்' (Woodstock West) என்றும் அல்டாமோண்ட் பிரீ கான்ஸெர்ட் (The Altamont Free Concert) என்றும் அது அழைக்கப்பட்டது. மூன்று லட்சத்திற்க்கும் மேல் பார்வையாளர்கள் குழுமியிருந்தார்கள். மேடையில் ரோலிங் ஸ்டோன்ஸ்(Rolling Stones) பாடிக்கொண்டிருந்த வேளையில் மெரிடித் ஹண்டர் (Meredith Hunter) என்ற ஒரு பார்வையாளர் குத்திக் கொல்லப்பட்டார். கொன்றது ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hell's Angels) என்ற ஹிப்பியுகத்தில் போற்றப்பட்ட ஒரு குழுவின் உறுப்பினர். மெரிடித் ஹண்டர் போதை மருந்தின் தாக்கத்தால் தன் சட்டைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்ததால் தான் அந்த ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் உறுப்பினரால் தற்காப்பிற்காக கொல்லப்பட்டார் என்று தெரியவந்தது.

இதை போலேவே தொடர்ந்து சில கொலைகள். வன்முறைகள். இது ஹிப்பிகளின் நடுவே பெரும் அதிர்வை உண்டு பண்ணியது. சுதந்திரம், அமைதி, மனவிரிவு என்று பேசியவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாகிறார்களே என்று பல அமெரிக்க ஊடகங்கள் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தன. மெதுவாக பலர் தங்களை ஹிப்பிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்கினார்கள். போதை மருந்துகளால் ஏற்படும் ‘மனவிரிவு' ('expanding consiousness') போன்றவைகள் மீது அவநம்பிக்கை உருவானது. ஹிப்பியலையும் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்தது.

இந்த அறுபதுகளின் இறுதிக்காலக்கட்டம் அமெரிக்கர்களுக்கு ஒரு சோதனைக் காலகட்டமாகவே படுகிறது. முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த ஒரு யுத்தம், கென்னடி, மால்க்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களின் படிகொலைகள் மற்றும் ஹிப்பி அலையின் தேய்வு போன்றவை தீவிர அவநம்பிக்கையை அவர்களின் மத்தியில் உண்டு பண்ணியது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் அறுபதுகளில் நிகழ்ந்தன. முதல் இருதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் மினீகம்ப்யூட்டர், BASIC போன்ற நிரழ்மொழி, இணையத்தின் முன்னோடியான ARPANET மற்றும் நிலவில் முதற் காலடி எடுத்து வைத்த அப்போலோ11 குழு போன்ற பல முக்கிய நிகழ்வுகள். இதில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்காற்றின. எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஹிப்பி மற்றும் எதிர்கலாச்சார அலைகள் கொஞ்சம் ஓய்ந்து புறவய உண்மையை அறிவியல் பார்வை மீண்டும் ஓங்கி எழுந்தது. இதற்கு எதிர் திசையில் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

*-*-*

எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்க்கா பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருபத்தி இரண்டு வயதுப் பையன் ஒருவன் ஈடுபட்டிருந்தான். அதன் முன்பு டியூக் பல்கலைக்கழத்தில் மருத்துவ முன்படிப்பு(Pre-Med) படித்துக் கொண்டிருந்த அவன், மருத்துவப் படிப்பில் காணப்பட்ட தீவிர ஒழுங்கு மற்றும் புறவயப் பார்வையால் அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறி நெப்ராஸ்க்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். மருத்துவப் படிப்பு தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றதாக இல்லாத்தாலும், தன் கற்பனைத்திறனையே மழுங்கடித்துவிடுகிறது என்று அவன் உணர்ந்ததாலும் அவன் பயோகெமிஸ்ட்ரியில் சேர்ந்தான். அதிலாவது தன் கற்பனையை உபயோகித்து சில செய்முறை ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று நினைத்த அவனை அவனது பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் உள்ள தவளைகளை எல்லாம் பிடித்து அதன் கண்களை நோண்டி எடுத்து சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். இவ்வகை ஆய்வுகளையே தொடர்ந்து ஒரு வருடமாக செய்த அவன் ஒரு நாள் ஆய்வுக்கூடத்துக்குப் போவதையே நிறுத்தினான். புறவயமான ஆய்வுமுறைகளில் உள்ள போதாமைகளை அவன் உணர்ந்தான். அதை மட்டுமே நம்பி எழுதப்பட்ட ஆய்வறிக்கைகளின் முழுமையின்மை அவனை வெகுவாக பாதித்தது. அதே சமயம் இதன் எதிர் திசை என்று அப்போது நம்பப்பட்ட ஹிப்பி அலையும் அவனை ஈர்க்கவில்லை. அதன் போதாமைகளையும் அவன் உணராமல் இல்லை.

இவ்விரு திசைகளிலும் நுழைய விடாமல் தடுத்தது அவனது உள்மனம். பல மாதங்கள் தனது விடுதியறையிலேயே அடைந்து கிடந்தான். பிறகு தீடீரென்று வெறித்தனமாக பல துறைச் சார்ந்த நூல்களை வாசிக்க ஆரம்பித்தான். அப்பொழுது பாஸ்டனில் புதிதாக துவங்கப்பட்ட ‘Shambala' என்ற பதிப்பகம் பல கிழக்கத்திய நுண் இறைவாதம் மற்றும் கிழக்கத்திய தத்துவம் சார்ந்த நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருந்தது. நெப்ராஸ்க்காவில் தன் விடுதியறையில் இருந்து பல நூறு புத்தகங்களை ஒவ்வொரு மாதமும் தபாலில் ஆர்டர் செய்துக் கொண்டிருந்தான். 'Shambala' அப்பொழுது ஒரு சிறிய பதிப்பகம். அந்த பதிப்பகத்தை தொடங்கிய சாம் பெர்ச்சோல்ஸ்(Sam Bercholz) ஆர்டர் எடுப்பதில் இருந்து புத்தகங்களைக் கட்டித் தபாலில் அனுப்புவது வரை அனைத்து வேளைகளையும் செய்து கொண்டிருந்தார். 'யார் இந்தப் பையன்? இத்தனை புத்தகங்களையும் இவன் படிக்கிறானா? இல்லை சும்மா வாங்கி வாங்கி விற்கிறானா? இத்தனையையும் இவன் படிக்கிறான் என்றால் இவனிடம் இருந்து ஏதோ ஒருநாள் நமக்கு ஒரு செய்தி வரும்' என்று நினைத்தார்.

இப்படி ஒரு வெறித்தமான வாசிப்பில் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் மூழ்கியிருந்தான். Tao Te Ching போன்றவை அவனை மிகவும் ஈர்த்தது. பௌத்தமுறை தியானத்திலும் ஈடுபட்டிருந்தான்.

தனது பயோகெமிஸ்ட்ரீ முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு குறித்து பேசும் நாள் நெருங்கியது. துறையின் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்தார்கள். "Photoisomerization of Rhodopsin in Bovine Rod outer segments" என்பது அவனது ஆராய்ச்சித் தலைப்பு. மேடையேறிய அவன் அவைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தான். ஆராய்ச்சித் தலைப்பு குறித்து பேசும் முன் தனக்கு பிடித்தமான இன்னொரு தலைப்பு குறித்து சிலநேரம் பேச அனுமதி கோரினான்.

'உண்மை நிலை மற்றும் யதார்த்தம் என்றால் என்ன? அதை நாம் அறிவது எப்படி?' (What is Reality? And how do we know it?') என்பதே அந்த தலைப்பு. மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவம், உளவியல், அறிவியல், நுண் இறைவாதம், மீபொருண்மைவாதம் என்ற பல்வேறு வழிகளின் ஊடாக ‘தூய உண்மை நிலை' என்றால் என்ன என்பதையும் அதை நாம் அறிய நமக்குள்ள சிக்கல்கள் என்ன என்பதையும் அதை மீறி செல்ல நமக்குள்ள பல்வேறு வழிமுறைகள் என்ன என்பதையும் பற்றி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விளக்கினான். அவன் விளக்கி முடித்த பின் அனைவரின் முகத்திலும் ஒருவித பிரம்மிப்பு கலந்த மிரள்ச்சியே சில வினாடிகள் நீடித்தது. பிறகு பின் கடைசி வரிசையில் இருந்து ஒரு குரல், "பிரமாதம்! பிரமாதம்! நாம் இப்பொழுது மீண்டும் 'நம்' யதார்த்தத்துக்குச் செல்வோமா? (‘Ah! Wow. Ok Now, Back to reality!')" என்றது. செமினார் அறை சிரிப்பலைகளால் அதிர்ந்தது. அந்தப் பையனாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு தனது விடுதியறையில் இந்நிகழ்ச்சிப் பற்றி அவன் யோசித்தான். தான் எவ்வளவு தான் சிந்தித்து கடுமையாக உழைத்து இத்தகைய உள்விரிவுள்ள தலைப்புகள் குறித்து பேசினாலும் இதற்கு இவ்வகை வரவேற்பே பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் இருக்கும் என்று உணர்ந்தான். தனது பேராசிரியரிடம் தான் முனைவர் பட்டப்படிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினான். 'பிறகு என்ன பண்ணப் போகிறாய்', என்று பேராசிரியர் கேட்டார். ‘Consiousness' தொடர்பாக ஒரு புத்தகம் எழுதப் போகிறேன் என்றான் அவன். ‘நீ ஒரு ஹிப்பியாகப் போகப்போகிறாய் என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டு உன்னை வாழ்த்தி விடையனுப்பி இருப்பேனே!' என்பது போல் செய்வதரியாமல் பரிதாபமாக ஒரிருநிமிடம் அவனைப் பார்த்தார் அந்த பேராசிரியர்.

*-*-*

பல்கலைகழகத்திலிருந்து வெளியேறி பின் அந்தப் பையன் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் தட்டுகளைக் கழுவுபவனாக(Dishwasher) வேலையில் சேர்ந்தான். பகல் வேலைகளைப் படிப்பிலும் மாலை வேலைகளை உணவகத்திலும் அவன் கழித்தான். அடுத்த பத்து வருடங்களும் அப்படியே. மாதம் உணவுடன் முன்னூறு டாலர்களை அந்த உணவகம் அவனுக்குத் அளித்தது. அதில இருநூறை புத்தகங்களில் கழித்தான்.

1973ஆம் ஆண்டு தனது 23ஆம் வயதில் ‘The Spectrum of Consiousness' என்ற ஒரு புத்தகத்தை எழுதி முடித்தான். இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் அது நிராகரிக்கப்பட்டது. கடைசியில் 1977ஆம் ஆண்டு அந்த புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில் அது ஒரு சிறிய அதிர்வை உண்டு பண்ணியது. ஹஸ்டன் ஸ்மித்(Huston Smith) போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற பலரால் அப்புத்தகம் பாராட்டப்பட்டது. இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் சார்ந்த அமைப்புகளும் (Academia) எதிர்கலாச்சாரச் சந்ததியினரும்(Dominant Counterculture) அப்புத்தகத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. அதைப் பற்றியெல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுகிக் கொண்டும் இருந்தான். தட்டுக் கழுவிக் கொண்டே அடுத்தடுத்து ஆறு புத்தகங்களை எழுதினான். அவற்றில் சில 'Shambala' பதிப்பகத்தாலேயே வெளியிடப்பட்டது.

*-*-*

அந்த முதல் புத்தகத்தில் ஆரம்பித்து தொடர்ந்து கடந்த இருபத்தைந்தாண்டுகளாக தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பற்றி இன்னமும் பிரபல ஊடகங்களுக்கும், பெரும்பாலான பேராசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழகங்களைச் சுற்றி உள்ள அமைப்புகளுக்கும், எதிர்கலாச்சாரச் சந்ததியினருக்கும் தெரியாது என்பதே உண்மை. ''the most important living philosopher you've never heard of" என்று Salon.com கூறும் அந்தப் பையனின் பெயர் கென் வில்பர் (Ken Wilber).



இந்த அளவுக்கு கென் வில்பர் உதாசீனப்படுத்தப்பட்டது/படுவது ஏன்? அப்படி என்ன தவறு செய்தார்?

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் மேலோங்கி இருக்கும் தகர்ப்பமைப்புப் பின்நவீனத்துவத்துடனும் (Deconstructive Postmodernism) அதன் மறுமுனையாக இருந்த எதிர்க்கலாச்சாரக் கற்பனைவாதம் சார்ந்த பின்னேற்றத்துடனும்(Romantic Ecoprimitivism) தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள மறுத்தார் என்பதே அந்தத் தவறாகும். பல்கலைக்கழகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டால் புறவய முறை மற்றும் தகர்ப்பமைப்புப் பின்நவீனத்துவத்துவம் போன்றவற்றோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருடந்தோறும் புறவய நோக்கில் மட்டுமே எழுதப்படும் ஆய்வரிக்கைகளைப் பதிப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும். ‘பதிப்பி அல்லது செத்து மறி' (Publish or Perish) என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள பல்கலைக்கழக அமைப்புகள் அவரை எவ்வகையிலும் ஈர்க்கவில்லை. இதில் இருந்து வெளியேறுபவர்களில் பெரும்பாலானோர் இதன் மறுதிசையாக இருந்த எதிர்கலாச்சார கற்பனைவாதம் சார்ந்த பின்னேற்றத்துடன்(Romantic Ecoprimitivism) தங்களை இணைத்துக் கொள்வார்கள். இது புறவய நோக்குக்கு மட்டும் அல்லாமல் அறிவுத்துறைக்கே எதிராக இருந்ததாலும் மனம், சுயம் உட்பட எல்லாவற்றையும் உடல், இயற்கை என்று சுருக்குவதாலும் இதனிலும் அவரால் தன்னை இணைத்துக் கொள்ள முடியவில்லை. . இவ்விரு வழிமுறைகளும் முழுமையானவை இல்லை.
இவைகள் எதையும் இரண்டாகப் பிரித்து பிரித்து ஆராயும் இருபொருள்வாத நோக்கு கொண்டவை என்றார்.

எல்லா துறைகளும் பாதைகளும் சில முக்கியமான உண்மைகளை நமக்குத் தருகின்றன. இவ்வித இருபொருள்வாத நோக்கு ஒன்றை முழுவதுமாக ஒடுக்கி மற்றோன்றை மீட்க முயல்கிறது . இவ்வாறு பல்வேறு அறிவுத்துறைகள் பிளவுபட்ட உண்மைகளையே நமக்கு அளிக்கின்றன என்றார்.

ஒரு அறிவுத்துறை எப்படி இயங்குகிறது, அது எத்தனை ஒற்றைப்படையாக உலகத்தைப் பார்க்கிறது, எப்படி அது எதிர்மறைக் கருத்துக்களைச் சுருக்குகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றறைப் பற்றி ஆழமாக எழுதினார். ஃபிராய்ட் எந்த இடத்தில் நமக்கு உதவுகிறார், பியாஜேவின்(Piaget) முக்கியத்துவம் என்ன, கெப்ஸரும் (Gebser) ஹெபர்மாஸும்(Habermas) கூறுவது என்ன, புத்தரும், ரமணரும் இதில் எப்படி எவ்வித முரண்பாடும் இல்லாமல் பொருந்துகிறார்கள் என்பதை விளக்கினார்.


கென் வில்பரின் மிக ஆதாரமான நோக்கு ஒன்று உண்டு என்றால் அது ‘எல்லாரும் சரியே' (Everybody is right) என்பதே ஆகும். இந்த நோக்கை, இந்த முறையையே முழுமைநோக்கு(Integral) என்கிறார். எந்தத் தரப்பையும் நிராகரிகாமல் அனைத்தையும் அரவனைத்து மேலெழும் ஒருவகை நோக்கே முழுமை நோக்காகும்(Integral View). இது பின்நவீனத்துவம் கூறும் பன்மைசார் ஒப்புநோக்குவாதம் ('Pluralistic Relativism') போல் தோன்றினாலும் இதற்கும் முழுமைநோக்கும்(Integral) பல முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

பன்மைசார் ஒப்புநோக்குவாதம் உலகமனைத்துக்கும் பொதுவான உண்மை என்ற ஒன்று கிடையாது என்கிறது. (There are no universal truths). முழுமைநோக்கு(Integral) சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகளை ஏற்கிறது. அவைகளை மேற்பரப்பில் தெரியும் தோற்றம் என்கிறது (Sociocultural Surface Structures). மேற்பரப்பில் தெரியும் தோற்றத்தைத்தோடு அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான, மாறாத பண்புகளும் (Universal Deep structures) உள்ளன என்கிறது முழுமைநோக்குப் பார்வை(Integral View). உளவியல், சமூகவியல், அறிவியல், தத்துவம், அறவியல், மீபொருண்மைவாதம், ஆன்மீகம் என்று பல தளங்களில் இவற்றைப் பற்றி விவாதித்து மானுடம் அனைத்துக்கும் பொதுவான அன்பு, கனிவு,அறவுணர்வு பற்றி விரிவாக பேசுகிறது.

ஒரு சில தளங்களோடு மட்டும் தங்களை அடையாளப்படுத்திப் பார்த்து திருப்த்தியடைந்து கொண்டவர்களுக்கு இவ்வகை முழுமைநோக்கு பெரும் நகைப்புக்குறியதாகவே தோன்றியது. ஃப்ராய்ட்டியம், வலுவான தன்முனைப்பு (Ego) தான் ஒருவரின் சுயத்தின் (self) ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறது. புத்தரும், ரமணரும் தன்முனைப்பும், தன்னுனர்வும் தான் ஒருவனின் சுயத்தை அறிய பெரும் தடைகற்களாக இருக்கின்றன என்கிறார்கள். எப்படி இவைகள் பொருந்தும்? நேர் எதிர் பாதைகள் அல்லவா இவை? என்று கேட்டார்கள். வில்பரின் கனவு ஒரு முதிரா மனதின் விபரீத முயற்சி என்றார்கள்.


இதற்கான பதில்களை வில்பர் விரிவாகவே தனது புத்தகங்களில் பதிவு செய்துள்ளார். சுருக்கமாக இப்படி சொல்லலாம். ஃப்ராய்டும், பியாஜேவும், புத்தரும், ரமணரும் மனம் என்ற ஒன்றைப் பற்றி பொத்தாம்பொதுவாக பேசவில்லை. நம் மன அமைப்பின் உள்ள வெவ்வேறு அடுக்குகளில் நின்றே மனதைப் பற்றி பேசுகிறார்கள். ஃப்ராய்டும், பியாஜேவும், எரிக்ஸனும் பிறப்பில் இருந்து இறப்பு வரை சுயம் எப்படி படிப்படியாக வளர்கிறது, எப்படிஎப்படியெல்லாம் அது உருமாறி முன்னேறுகிறது, அவ்வழியில் எவ்வகை நோய்க்கூறுகளை, மனக்கோளாறுகளை, சிக்கல்களை எதிர்கொள்கிறது, அந்த சிக்கல்களில் சிக்குண்டு எவ்வாறு அது தத்தளிக்கிறது, அதில் இருந்து மீழ்வதற்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பற்றியே பேசுகிறார்கள். அதாவது Pre-Personal நிலையில் இருந்து Personal நிலைவரையிலான தன்முனைப்பின், சுயத்தின், ஆளுமையின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் பற்றியே அவர்கள் பெரும்பாலும் பேசுகிறார்கள். ரமணரும் புத்தரும் Personal நிலையில் இருந்து Trans-Personal நிலை நோக்கி நகர விழையும் சுயத்தின் நகர்வைக் குறித்தே பேசுகிறார்கள். அதாவது தன்முனைப்போடு (Ego) சுயம்/ஆளுமை (Self / Personality) கொள்ளும் குறுகிய அடையாளம் அகன்று விரிவாகிச்செல்லும் பாதையைப் பற்றியே இவர்கள்பேசுகிறார்கள்.

Pre-Personal நிலையில் இருந்து Personal நிலைவரையிலான வளர்ச்சிக்கு தன்முனைப்பின் பங்கு இன்றியமையாதது. தனித்துவம் மிக்க ஒரு ஆளுமைக்கு வலுவான தன்முனைப்பு தேவையான ஒன்றே. இங்கு ஃப்ராய்டும், பியாஜேவும் மற்ற பல உளவியல் அறிஞர்களும், அவர்களின் பலவகைக் கொள்கைகளும்(theories) முக்கியமானவை. அதே போல் Personal நிலையில் இருந்து Trans-Personal நிலைநோக்கி நகர தன்முனைப்பின் இறுக்கம், சுயம் தன்முனைப்போடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்துதிக் கொள்ளுதல் போன்றவைகள் தளருவதும் அவசியமே. இங்கு ரமணரும், புத்தரும் கூறியவை முக்கியமானவை.

இதுபோல் ஒவ்வொறு துறைகளிலும் பல்வேறு சிக்கல்களை, சேரவே சேராது என்று இருக்கும் பலவித பாதைகளை வில்பர் இனம்கண்டார். இதன் பொதுகூறுகளைக் கொண்டு இவற்றை இருவகையில் பிரித்தார் - மேற்நோக்கும் பாதை(Ascent) மற்றும் கீழ்நோக்கும் பாதை (Descent). கீழ்நோக்கு என்பதால் அப்பாதை ஒன்றும் இழிவானது இல்லை. இவ்விரு பாதைகளும் ஒரே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையே.

விசையைத் தகர்த்து, விண்ணில் பறந்து, காற்றைக் கிழித்து, காற்றையே உண்டு காற்றோடு காற்றாக கலப்பது ஒருவகை. மண்ணில் பிறந்து மண்ணில் அலைந்து மண்ணிலேயே மகத்துவத்தைக் காணுவது மற்றொரு வகை. முரண்பாடே இல்லாமல் இவ்விரண்டும் இணையும் பாதையே வளர்ச்சிக்கான சிறந்த பாதை என்கிறார்.

மேற்நோக்கு மற்றும் கீழ்நோக்கு என்பதை பல இடங்களில் பலவாறு விவரிக்கப்பட்டுள்ளன. அப்போலோ- தியோனாஸிஸ் (Apollo,Dionysus), அலேப்- ஜகீர்(Alaeph,Zahir), சிவன்-சக்தி, சம்சாரா-நிர்வாணா, பிரஜ்னா-கருணா (Prajna-Karuna), யின்-யாங் (Yin-Yang) என்று பல்வேறு பெயர்களில்.

யின்னும்-யாங்க்கும் முரணில்லாமல் சேரும் நிலையே தாவோ (Tao). பிச்சமூர்த்தியும், நாஞ்சில் நாடனும் ஒருசேரும் புள்ளி போல்.

- தொடரும்

Friday, June 20, 2008

வானிலிருந்து விழும் அருவி

போன பதிவிற்கு சில மின்னஞ்சல்கள் வந்தன. பெரும்பாலானவை ”இவ்வளவு குழப்பமானதா வாழ்க்கை.. இந்த சண்டைகள், தத்துவப் பிரச்சனைகள் எல்லாம் மேலும் மேலும் வாழ்க்கையை பிரச்சனைப் படுக்கிக் கொண்டே போகின்றனவோ?.. வாழ்க்கை மிகச் சுலமானது என்றே தோன்றுகிறது.... மரநிழலில் வாழ்வதற்கு பதில் பலமாடி கட்டடங்களைக் கட்டி விட்டு, உள்ளே புழுக்கம் தவிர்க்க, குளிர் பதன சாதனங்களை பற்றி வியாக்கியானங்கள் தருகிறார்களோ என்று தோன்றுகிறது? ரமணரின் அந்த ஏழு பக்கங்களையே (''நான் யார்?”) என்னால் தாண்ட முடியவில்லை..அதுவே எனக்குப் போதும்...” என்ற மனநிலையை ஒட்டியே வந்தன.

அவரவர்களுக்கு ஏற்றது எது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்கிறதோ அதுவே அவர்களின் பாதை. ரமணரிடமே தன் சஞ்சலங்கள் அடங்கி மனம் அமைதி கொள்கிறது என்ற ஒரு தெளிவு இருந்தால் அதுவே அவர்களின் பாதை. தத்துவங்களை அறியவோ வாழ்வில் உள்ள எண்ணற்ற முரண்பாடுகளை அறியவோ எந்த ஒரு கட்டாயமும் இல்லை.

அப்புறம் ஏன் இத்தனை தத்துவங்கள்? ஏன் இத்தனைப் பெரிய பதிவு ?

*-*-*

வாழ்க்கையை தத்துவங்கள் complicate பண்ணுகின்றவா? இல்லை நாமே complicate பண்ணிக் கொண்ட வாழ்க்கையை தத்துவங்கள் புரிந்து கொள்ள முயல்கின்றனவா?

வாழ்க்கை சுலபம் என்ற புரிதல் ஒருவரிடம் இருந்தம் கூட ஏன் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளது?

*-*-*

கென் வில்பர் மற்றும் ரமணர் சொல்ல விழைவது வெவ்வேறு தளங்களில் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கென் வில்பரும் கூறியவை பெரும்பாலானது தின வாழ்வின் சிக்கல்களைத் தாண்டி, அதன் அலுப்புகள், கயமைத்தனங்களைத் மீறி மேல்நோக்கிப் போவது பற்றி. சுருக்கமாக 'Relative reality' பற்றி.

ரமணர் கூறுவதில் பெரும்பாலாவை 'Absolute reality' பற்றி. 'மரங்கள் அடர்ந்த நிழலில் குடிசை கட்டி' வாழ்வது துறவு மனநிலையை இயல்பாக உடைய ஒருவருக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். அந்த மனநிலைக்கு வர நாம் லௌகீகத்தில் பல நாட்கள் வாழ்ந்தாக வேண்டும். ஒரு கனி பழுப்பது போல் துறவும் ஒரு நிகழ்வே. அதுவரையில் இந்த 'Relative reality' பற்றிய ஒரு புரிதல் நமக்குத் தேவை. அதிலும் ஒரு நிறைவான, அடர்த்தியான வாழ்க்கையை வாழ்தலே நமக்கு தரப்பட்டுள்ள இந்த வாழ்க்கைக்கு நாம் செய்யும் மரியாதை. அர்த்தம். இந்த இடத்தில் தான் வில்பரும், அரவிந்தரும் உதவுகிறார்கள். கலை இலக்கியமும் இதற்கே. ஜெயமோகன் 'கலை இலக்கியம் எதற்கு' என்ற ஒரு கட்டுரையில் இது பற்றிக் கூறுகிறார்.

”காகா காலேல்கர் இந்திய நதிகளையெல்லாம் சென்று கண்டு சிறந்த பயண அனுபவ நூலை எழுதியவர், தமிழில் அந்நூல் வந்துள்ளது.ஒருமுறை காகா காலேல்கர் ஜோக் அருவியைக் காண காந்தியை அழைத்தார். 'இந்தியாவிலேயே உயரமான அருவி அது' என்றார்.

'நான் வானிலிருந்து விழும் அருவியை சிறுவயதிலேயே கண்டுவிட்டேன்' என்றார் காந்தி.

உச்சப் படியில் நிற்பவன் யோகி. வாழ்க்கையையே ஒரு யோகசாதனையாக, தவமாக கொண்டவன். வாழ்க்கையை வாழ்க்கையாலேயே நிறைப்பவன்., அதன்பொருட்டு ஒருவாழ்க்கையை ஓராயிரம் வாழ்க்கையளவுக்கு விரிவாக்கிக் கொண்டவன். அவனுக்கும் கலையும் இலக்கியமும் தேவை இல்லை. காந்தி இலக்கியம் படித்தவரல்ல, இசை கேட்டவருமல்ல.பிறருக்கு இலக்கியம் அவர்கள் வாழ்வின் இடைவெளிகளை ஓயாது நிரப்பியபடி பெய்யும் பெரும் பெருக்கு. வெற்றிடங்களை வானமே நிரப்புகிறது என்பது நம் ஞான மரபின் கூற்று. இலக்கியம் கற்பனையின் எல்லையில்லாத வானம். வானமே மழைக்கிறது. மண்ணை நிறைக்கிறது."

தத்துவத்தின், Rhetoricக்கின் தேவையும் அதே போல் தான். நம்மைப் போன்ற எளியவர்கள் வாழ்வின் வெற்றிடங்களை நிரப்பிக் கொள்வதற்கு!

*-*-*

தவிர, கட்டுரை எழுதப்பட்டது தமிழ்ச் சூழலில் ஒரு சிறு உரையாடலைத் துவக்குவதற்கே. மேலும் மேலும் குழப்புவத்ற்கு அல்ல.

ஆனால் Einstein சொன்னது போல், 'Make everything as simple as possible, but not simpler'.

(நாராயணன் ஒரு நீண்ட பின்னூட்டத்தை இங்கு எழுதியுள்ளார். நன்றி).


Wednesday, June 18, 2008

அறிவியல் ஆன்மீகம் மதம்: கென் வில்பரை முன்வைத்து!

சில மாதங்களாகவே ஒரு பதிவை எழுத ஆரம்பித்து அது முடிவேயடையாமல் என்னை ரொம்பவும் படுத்தி எடுத்து விட்டதால் அதை கொஞ்சம் காயப்போட்டு விட்டு வேறு எதையாவது கொஞ்சம் எழுதிப் பார்கலாமே என்ற முடிவுடன் இன்று உக்கார்ந்தால் என்ன எழுதுவது என்றே புரியவில்லை. பிறகு பத்ரி Pseudo-Science மற்றும் New Age பற்றி எழுதச் சொன்னது ஞாபகம் வந்தது. அதைப் பற்றி மட்டும் தனியாக எழுதுவதற்கு பதிலாக அதனோடு தொடர்புடையவற்றையும் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று பட்டது.

*-*-*
தமிழ் வலைப்பதிவுகளை சில காலமாகவே படித்து வருகிறேன். எத்தனை எண்ணங்கள். எத்தனை குழுக்கள். குழப்பங்கள். வம்புகள். சண்டைகள்.

தீவிரமாக அகம், இந்து தர்மம், உள்ளொளி என்று பேசுபவர்கள் சிலர்.

உள்ளொளி என்ற வார்த்தையைக் கேட்டாலே அதே போல் ஒலியமைப்புள்ள ஒரு தமிழ்க் கெட்ட வார்த்தையை கூறும் நீட்ஸே, ஹெய்டீகர், ஃபூகோ, உடலரசியல் என்று பேசும் சிலர்.

'முதலாலித்துவ குட்டையில் ஊறின மட்டைகளே.. குட்டி பூர்ஷ்வாக்காளே..' என்று செல்லமாக மிரட்டும் அதிதீவிர வலதுசாரிகள் ஒரு சிலர்.

'பார்ப்பன அடிவருடிகளே.. ஃபாஸிச மலங்களே' என்று திராவிடம், பெரியாரிசம் பேசும் சிலர்.

இவற்றின் நடுவே தடம்தெரியாமல் மாட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று குழம்பி பிறகு Freakonomics, Tim Harford, James Surowiecki, David Weinberger, Entrepreneurship என்று தங்கள் அடையாளத்தை தேடிச் செல்லும் சிலர்.

இது எதுவுமே வேண்டாம் என்று தினவாழ்வு குறித்த அரட்டைகளில் மட்டும் ஈடுபடும் பலர்.

இதன் நடுவில் சாரு, ஜெயமோகன், எஸ்.ரா, நாகார்ஜுணன் போன்ற எழுத்தாளர்களின் வலைப் பிரவேசம். அவர்களைச் சுற்றி உருவாகும் வாசகர்கள் மற்றும் குழுக்கள்.

ஒரு புது வாசகன் இந்த விசித்திர காட்டின் ஊடே எப்படி பயனிப்பான்? எதில் ஆரம்பிப்பான்? எந்த இடத்திற்கு வந்து சேர்வான்? எவ்வழியாக வந்து சேர்வான்? எப்படி வந்து சேர்வான்? காட்டை கடப்பதற்குள் அவன் எத்தனை பாதைகளை கடக்க வேண்டி வரும்? காட்டை கடந்ததாக எண்ணி அவன் அடையும் இடமும் இன்னொரு காடுதானோ?

*-*-*

தமிழ்ச் சூழலில் மட்டும் தானா இப்படி என்று பார்த்தால் எல்லா இடங்களிலும் உள்ளதுதான் இது என்பது புரியவரும். இந்த பதிவில் New Age, Pseudo Science போன்ற ஒரு சிலதை மட்டும் கொஞ்சம் மேம்போக்காக பார்ப்போம். வரப்போகும் பதிவுகளில் மேலும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

*-*-*

New-age spirituality ஒரு வகை உயர்த்திப்பிடித்தல்(‘Elevationism'). இயற்பியல் உட்பட அனைத்தையும் கடவுள் காரணிகளால் விளக்க முற்பட்டு அனைத்தயும் உயர்த்திப் பிடிப்பது ஒரு வகை. மற்றோரு வகை Neale David Walsch, Robin Sharma, சுவாமி சுகபோகானந்தா போன்றோர்களால் ஆனது. தியானம் செய்தால் புத்துணர்ச்சி பெருகும்.தியானம் செய்தால் நீங்கள் தினமும் Treadmillஇல் லொங்கு லொங்கென்று ஓடத் தேவையில்லை. ஓம் நமோ நாராயணா என்று நீங்கள் இருநூறு முறை ஜபித்தால் வேலையில் இருந்து கவனம் சிதறாது. உங்கள் மேலதிகாரி உங்களைப் பார்த்து impressஆகி பதவி உயர்வு தருவார், மனம் மூன்று லார்ஜ் அடித்தது போல் relaxஆக காத்தோட்டமாக இருக்கும் என்பது போல் இவ்வகை நீளும். (இதுக்கு நான் மூணு லார்ஜே அடிச்சிட்டு பேசாம இருப்பனே என்று நீங்கள் கேட்பது புரிகிறது)

Pseudo-science ஒரு வகை சுருக்குதல் ('Reductionism'). Mysticism உட்பட எல்லாவற்றையும் இயற்பியலின் மூலம் விளக்க முற்பட்டு அனைத்தயும் பருப்பொருட்களாக(Matter) சுருக்குககுவது இது. Quantum mechanics பற்றி பைபிளில் இந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது. M-Theory பற்றி நடராஜர் சிலையில் பல குறியீடுகள் உள்ளன போன்றவை. கேரி ஷுகாவ் (Gary Zukav) முதல் மணி பௌமிக் வரை பல உதாரணங்கள். இதை எல்லாம் ஆரம்பித்து வைத்த காப்ரா (Capra) பிறகு தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டார். அவருக்கும் கென் வில்பருக்கும்(Ken Wilber) நடந்த விவாதம் Pseudo Science மற்றும் New Age குறித்து பல தெளிவுகளை அளித்தது. அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்

New-Age மற்றும் Pseudo-Scienceல் மட்டும் அல்லாமல் தீவிரமான அறிவியல் ஆராய்சிகள் - Consiousness, Cognitive Science, Transpersonal psychology பற்றிய ஆராய்சிகளிலும் இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இதை தவறுகள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இவை பிளவுபட்ட ஒரு உண்மையையே நமக்கு அளிக்கின்றன். (முழு முதற் உண்மை தான் எதற்கு வேண்டும்.. அவை நிலபிரபுத்துவ மதிப்பீடுகளால் ஆனது.. ஃபாஸிசத்தில் தான் அது போய் முடியும் என்றும் கேட்கலாம். அதைப் பற்றியும் பிறகு..)

*-*-*

யூங் இதில் கூறப்பட்டுள்ள முதல் வகை என்றால் ஃப்ராய்ட் இரண்டாம் வகை. விக்டர் ஃபிராங்கல் முதல் வகை என்றால் லக்கான் இரண்டாம் வகை. ஃப்ராய்ட் id-ego-superego, Infantile regression என்று சுருக்குகிறார் (reductionism). யூங் ஆழ்படிமம் (Archetypes) என்று அதை elevate செய்கிறார்.

அதே போல் Cognitive Neuroscienceல் வி.எஸ்.ராமசந்திரன் மற்றும் ஸ்டீவன் பிங்கர் போன்றோர் மனதை (Mind) மூளையாக (Brain) சுருக்குகிறார்கள். ஒரு ஆன்மீக அனுபவத்தை (Mystical experience) மூளையில் உள்ள Temporal Lobesல் நடக்கும் ஏதோ கசமுசா என்று சொல்கிறார்கள். ராமசந்திரன் இவ்வகை சுருக்குதலை மறுத்தாலும் அவரின் ஆராய்ச்சிகள் பலவும் இந்த Mind-Brain சுருக்குதலைச் சுற்றியே உள்ளது .

ஒரு ஆப்பிளை பார்த்தவுடன் மூளையில் சில பகுதிகள் கிளர்ச்சியடைகின்றன என்பதனால் ஆப்பிள் என்ற ஒன்றே கிடையாது ஆப்பிள் என்பதே மூளையின் அந்த பகுதியில் நடக்கும் ஒரு சில நியுரான்களின் சிதறல்கள்தான் (Neuronal Fireworks) என்று கூறமுடியுமா? அதே போல் ஒரு ஆன்மீக அனுபவம் Temporal Lobesல் உள்ள சில பகுதிகளை கிளர்ச்சியடையச் செய்தால் அந்த அனுபவம் ஒரு Mystical experienceஏ கிடையாது அது வெறும் நியுரான்களின் சிதறல்கள் என்று தான் சொல்லமுடியுமா?

ஒரு வசதிக்காக இந்த இரண்டு வகையையுமே நாம் ‘Reductionism / சுருக்குதல்' என்று வைத்துக் கொள்வோம். ஒன்றின் உண்மையான தன்மையை அது இல்லாத வேறு ஒன்றாக சுருக்குதல். இந்த சுருக்குதல்களால் பல பிரச்சனைகள். சேரவே சேராது என்று நம்மை நினைக்க வைக்கும் பல பாதைகள். அதைச் சுற்றி எழும் குழுக்க்கள். அக்குழுக்களின் மீது எழும் அதிகார மையங்கள். சண்டைகள். சச்சரவுகள். மற்றும் பல.

ஏன் இந்த தவறுகள் நடக்கின்றன? மேலே குறிப்பிட்ட பலர் பேரறிஞர்கள். மிக முக்கியமான பல கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர்கள். இருந்தும் ஏன் இப்படி? பல காரணங்கள் இருக்கக் கூடும். அவ்வறிஞர்கள் இருந்த காலகட்டம் மற்றும் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். ஃப்ராய்ட் இருந்த இருக்கமான விக்டோரியன் வியன்னா சூழல் அவரின் ஆராய்ச்சி முடிவுகளை பாதித்திருக்கலாம். ஒரு வித skeptical பின் நவீனத்துவச் சூழலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் ராமசந்திரனை பாதித்து இருக்கலாம்.

இது தவிர வல்லுநர்களுக்கே (Specialist) உரித்தான சில பண்புகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். 'Small is Beautiful' என்ற புத்தகத்தை எழுதிய E.F. Schumacher இப்படி கூறுகிறார் - “Most specialists normally suffer from a kind of metaphysical blindness, assuming that theirs is a science of absolute and invariable truths, without any presuppositions”. தனது துறையே தனது ஆராய்ச்சியே மானிட குலத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. ஒரு வித Metaphysical Blindness. இதில் வேடிக்கை - Metaphysical speculationல் ஈடுபடுவோர்கள் (தத்துவ அறிஞர்கள், மெய்ஞானம் குறித்த உளவியல் ஆராய்ச்சித் துறைகளில் இருப்பவர்கள், மொழியியல் அறிஞர்கள் மற்றும் பலர்) கூட இந்த Metaphysical Blindnessக்கு விதிவிலக்கல்ல. அவர்களையும் இந்த Blindness அலைக்கழிக்கிறது. கடைசி காலத்தில் E.F.Schumacher கூட இதில் சேர்த்தி என்பது ஒரு வித சங்கடமான உண்மை.

*-*-*

சர்தான்பா..எல்லாருமே தப்புன்னா அப்போ நாம எங்க தான் போறது? இது வரைக்கும் கண்டுபிடிச்சது எல்லாமே தப்புன்னா அப்போ எல்லாத்தயும் குப்பையில போட்டு கொளுத்திட்டு முதல்ல இருந்து ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடுமா? என்று கேட்கலாம். கொளுத்தி போடதெல்லாம் போதுமே. அப்படியே கொளுத்திவிட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தாலும் நாம் வந்த இடத்திற்க்கே மறுபடியும் வருவதற்கான சாத்தியங்களும் உண்டு.

இக்காலம் வரை நமது பல தியரிகளில் பல Methphysical speculationகளில் பல கண்டுபிடிப்புகளில் குறைகள் இருக்கலாம். அவைகள் முழு முதற் உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அதே போல் அவைகள் முழு முதற் தவறுகளும் இல்லை. கென் வில்பர் சொன்னது போல் ‘I believe No human mind is smart enough and capable of producing 100 per cent error'. இதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னால் - ‘Everybody is Correct'. (Well, to an extent).

கொளுத்தி போட்டு விட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிப்பது அல்ல நம் வேலை. பற்பல துறைகளில் உள்ள எதிர்மறைக் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் நம்மால் முடிந்த வரை ஒரு முழுமையான தளத்தை அளிப்பதே. 'Integral' என்பது நம் அரவிந்தரில், நாராயண குருவில் இருந்து பலரும் பல வகையில் பேசி வந்ததே. இது வரையில் ஒரு வித அடைய முடியாத இலக்கு போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது கென் வில்பர் என்ற ஒருவர் தனது எழுத்தின் மூலம் மிகத் தீவிரமாக அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

மேலே சொன்னது போல் பல துறைகளில் உள்ள எதிர்மறைக் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் முடிந்த வரை ஒரு முழுமையான சித்திரத்தை அளிப்பதே ‘Integral Approach' ஆகும். மாறுபட்ட கருத்துக்கள், நாராயண குரு சொன்னது போல், ஒன்றை ஒன்று நிரப்பி, ஒரு முழுமையாண சித்திரத்தை நோக்கிச் செல்கின்றன. இதற்கு பல தளங்களில் ஒருவர் ஆழமாக படித்திருக்க வேண்டும். அப்படியே படித்தாலும் கூட அத்தளங்கள் அளிக்கும் பல நுண்ணிய சிக்கல்கள் மற்றும்
வேறுபாடுகளை உள்வாங்கிக் கொண்டு அதை வைத்துக் கொண்டு ஒரு முழுமையான சித்திரத்திற்கு வந்தடைய ஒரு ஆயுள் போதாது. ஆனால் கென் வில்பர் இதை கொஞ்சம் முயற்சித்துள்ளார். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவங்கள், உளவியல் மட்டும் அல்லாமல் இயற்பியல், உயிரியல், வேதவியல்(அவர் ஒரு BioChemistry மாணவர்.Biochemistry முனைவர் பட்ட ஆய்வில் இருந்து வெளியேறி அடுத்த பத்து வருடங்களில் ஒரு உணவகத்தில் Dishwasherஆக வேலைப் பார்த்துக்கொண்டு 6 புத்தகங்களை எழுதினார்) போன்ற பல துறைகளில் ஆழமாக பயின்றவர். பின் நவீனத்துவம் பற்றிய அழகான புரிதலும் உண்டு. ஆனால் இவை அனைத்தின் போதாமைகளையும் உணர்ந்த அவர் 'Integral Methodological Pluralism' என்ற ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி முறையை (Research and Praxis Method) உண்டாக்கினார். இதில் Phenomenologyஇல் இருந்து Orienting Generalizationவரை, Gestalt theraphyயில் இருந்து பல வித தியான, யோக முறைகள் வரை , Hermeneuticsல் இருந்து Rogerian Counsellingவரை, Transactional Analysisல் இருந்து Bio-Energetics வரை பல பல வித முறைகள் அடக்கம். எல்லாவற்றையும் கலந்துக் கட்டுக் கொண்டுள்ள ஒரு காக்டெய்ல் அல்ல இது. நம் மன அமைப்பின் பலவித அடுக்குகளுக்கேற்ப பலவித முறைகள்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில்களிக்கக்கூடிய மாயக்கண்ணாடியே தனது தியரிகள் போன்ற Delusions மற்றும் Metaphysical Blindness அவரிடம் இல்லை. அவர் உருவாக்கிய தியரிகளை ஒருவித வரைபடங்கள் என்றே கூறுகிறார். உள்ளடக்கம் அற்ற வரைபடங்களே (Maps & Frameworks devoid of content)அவை. அவற்றுக்கு வண்ணம் தீட்டுவதும் உள்ளடக்கம் அளிப்பதும் அந்தந்த துறைகளில் உள்ள Specialistகளின் வேலை.

கென் வில்பர் பற்றிய ஒரு அறிமுகப் பதிவை எழுகிக் கொண்டே உள்ளேன். இந்தப் பதிவில் மதம், ஆன்மீகம் மற்றும் அறிவியல் குறித்த அவரின் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம். இவை New Age மற்றும் Pseudo Science குறித்து சில தெளிவுகளை நமக்கு அளிக்கும்.

*-*-*

மதம் என்ற சொல்லுக்கு பின் நமக்கு ஒரு பொதுப் புரிதலே உள்ளது. மதம் என்று நாம் குறிப்பிடும் போது எவ்வகை மதத்தை நாம் குறிப்பிடுகிறோம்? அது ஒரு தனிநபரை மய்யப்படுத்தும் மதமா (Egocentric religion), இல்லை ஒரு குழுவை மய்யப்படுத்தும் மதமா (Ethnocentic religion) இல்லை ஒரு உலகமனைத்தயும் அரவணைத்து எழும் மதமா (Worldcentric religion)?

இந்து மதத்திலும் Egocentricவகை உண்டு, Ethnocentricவகை உண்டு, Worldcentricவகை உண்டு. அதே போல் கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களிலும் இந்த மூன்று வகைகள் உண்டு. பழங்குடி மதங்களிலும் உண்டு. செமிடிக்கிலிருந்து பாகன் மதங்கள் அனைத்திலும் இவ்வகைகளைக் காணலாம். இந்த மூன்று வகைகளுமே ஒரு வித கீழிருந்து மேல்நோக்கும் வகைப்படுத்துதல் (bottom-up classification). அதாவது அந்த மதத்தை வழிபடுபவரின், அந்த குழுவின் தன்மைகளில் (generic traits) இருந்து அவ்வகைகள் எழுகின்றன. ஒரு வகையில் இருந்து ஒருவர் இன்னொன்றுக்கு ஒருவர் முன்னேறலாம். இவை ஒருவித linear தன்மை கொண்டவை அல்ல. இந்த வகைகள் கடலலைகளைப் போல். ஒன்றுடன் ஒன்று சிறிது கலந்தே இருக்கின்றன (Fuzziness) . கண்மூடித்திறப்பது போல் ஒருவன் ஒரு வகையில் இருந்து இன்னொரு வகைக்குத் தாவ முடியாது. அவ்வகை திடமான திட்ட வட்டமான வரையரைகளும் இதற்கு கிடையாது. இதை புரிந்து கொள்வது அவசியம்.

உதாரணமாக Egocentric Religion வகையை ஒரு புரிதலுக்காக இப்படி விளக்கலாம். சிறுவயதில் (எனக்கு காலேஜ் வரையில்) பரிட்சையில் பாசானால் புள்ளையாருக்கு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக் கொள்ளுதல், என்னை ஏமாற்றி ஓடியவன் மீது கடவுள் தான் லாரியை ஏவி விட்டார் போன்ற நம்பிக்கக்கள் ஜோதிடம், செய்வினை, Vodoo போன்றவைகள். தனிமனித ஆசைகளை, ஏக்கங்களைச் சுற்றியே இவை இயங்குகின்றன. Vodooவில் ஒரு தனி மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதற்க்காக மனித வடிவில் உள்ள பொம்மை மீது ஊசியைக் குத்துவது Egocentric religionக்கு சிறந்த உதாரணம். பிரபல ஊடகங்களில் மதத்தின் பொருட்டு அதிகமாக பேசப்படுபவை இவ்வகையே.

அடுத்து Ethno-centric religion. இதை பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் காணப்படுவது இதுவே. பல அரசியல் மற்றும் மத நிறுவனங்களும் இவற்றைச் சுற்றியே. மற்றோரு குழுவால் மற்றோரு மதத்தால் ஒரு மிகப் பெரிய ஆபத்து தமக்கு தன் மதத்துக்கு தன் குழுவுக்கு ஏற்படப் போகிறது போன்ற ‘Conspiracy theory'க்கள் மீது கண் மூடித்தனமான நம்பிக்கைகள் இவர்களுக்கு இருக்கும். அதற்கான ஆதாரங்களை திரட்டியபடியே இருப்பார்கள். இவை அனைத்துமே Mythologies மீது கட்டப்பட்டுள்ளவை. இவ்வகை வலைத்தளங்களுக்குச் சென்றால் காணக்கிடைக்காத கறுப்பு வெள்ளை மற்றும் பலவர்ண படங்களை நீங்கள் கண்டு மகிழலாம். பல்வேறு அனுமார்கள், கிருஷ்ணபரமாத்மாக்கள், சிவலிங்கம், நடராஜர், ஏசு கிருஸ்து மற்றும் தினசரிகளில் வரும் அரிய செய்திகள், பண்டைய நாணயங்களின் படங்கள் போன்றவைகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்திய கொடி ஏந்தி தலையை தலையை ஆட்டிக் கொண்டு மார்ச்ஃபாஸ்ட் செய்யும் சிறுவனையும் நீங்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.

World-centric Religion - இவைகளை தாண்டி ஒருவர் செல்லும் போது அடைவது. ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் இடையே ஒரு பாலம் போல். Egocentric மற்றும் Ethnocentric போன்ற குறுகிய அடையாளங்களில் இருந்து வெளியேறுவது. இதைப் பற்றி ஜெயமோகன் ஆன்மீகம், தத்துவம், மதம் என்ற ஒரு அழகான கட்டுரையை எழுதியுள்ளார்.

*-*-*

ஆன்மீகம் குறித்தும் அறிவியல் குறித்தும் பல தவறான புரிதல்களை நமக்கு பல அமைப்புகளும் ஊடகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. New Age ஆன்மீக அனுபவத்தை ஏதோ ஒரு ட்ராபியை வெல்வது போல் உயர்த்தித் தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளது. மெய்ஞான அனுபவம் அடைந்த ஒருவன் உலகிலேயே மிக புத்திசாலியாக பலசாலியாக ஆவான் போன்ற பொத்தாம்பொதுவான கருத்துக்கள் அவர்கள் உதிக்க அது அறிவியல் அறிஞர்களைக் கோபம் கொள்ளச் செய்கிறது. ஒரு மெய்ஞானி Third Order Differential Equationயை solve பண்ண முடியுமா, F1 பந்தையத்தில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியுமா என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். எல்லாமே ஒரு வித கேலிக் கூத்தாகி விடுகிறது.

அதே போல் அறிவியல் அறிஞர்களும் சும்மா இல்லாமல் இந்த உள்ளொளி ஆன்மீக அனுபவம் எல்லாம் சும்மா புருடா. எங்கே நிரூபிக்கச்சொன்னுங்கள் அவர்களை என்று சவால் விடுகிறார்கள். ராமசந்திரன் போன்றோர் ஒரு படி மேலே போய் ஆன்மீக அனுபவத்தையும் Temporal Lobesல் நடக்கும் வானவேடிக்கையாக விளக்க முயல்கிறார்கள்.இந்த குழப்பங்கள் சமூகவியல், மானுடவியல், தத்துவம், இலக்கியம் போன்ற பல துறைகளை பாதித்து உள்ளது. ஒரு வித இரட்டை தன்மையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்தியது. நம் பிரமிளும் சுந்தர ராமசாமியும் கூட இதனால் ஏதொ ஒரு வகையில் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.

இதை கென் வில்பர் Pre/Trans Fallacy என்கிறார். Pre-rational நிகழ்வை Trans-Rational அனுபவத்தோடு குழப்பிக் கொள்வது. ரோஸ்ஸோ போன்ற கற்பனாவாதிகளில் (Romanticists) இருந்து யூங் போன்ற உளவியல் அறிஞர்கள் வரை இந்த Fallacyல் மாட்டிக் கொண்டவர்கள் அதிகம்.

உதாரணமாக அடிக்கடி நாம் குழந்தைகளை இயற்கையோடு ஒன்றி இருப்பவர்கள், சுயமிழந்து ஆனந்தத்தில் மிதப்பவர்கள் போன்று வர்ணிக்கிறோம். இவை இலக்கியச் சரியாக இருக்கலாம். ஆனால் இவ்வகை elevationism அறிவியல் சரியாக இருப்பதில்லை. Pre-Personal Consiousnessயை Trans-Personalஆக உயர்த்துவதே இது. பியாஜே, மார்கெரெட் மாஹ்லெர் போன்றோரின் குழந்தைகள் பற்றிய ஆய்வுகளில் குழந்தைகள் ஒன்றும் சுயத்தை இழந்து ஆனந்தத்தில் மிதப்பவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. சுயமே இன்னும் வளராத ஒரு disassociated நிலையிலேயே அக்குழந்தை உள்ளது. William James அதனை ஒரு ‘Blooming Buzzing Confusion' என்கிறார்.

Transpersonal psychology குழந்ததையின் மனம் சுயமிழந்து தூய நிர்வாண நிலையில் உள்ள ஒன்று என்றே வகைப்படுத்துகிறது. 12-18ஆவது மாதத்தின் போது இரட்டை தன்மைகள் அதற்குள் கூடிகொள்கிறது என்றும் பிறகு வாழ்க்கையே ‘Return to Innocence'க்கான ஒரு போராட்டம் தான் என்கிறது Transpersonal psychology. இது கவித்துவச் சரியாக இருக்கலாம். Developmental psychologyஓ சுயமே இன்னும் வளராத குழந்தை எப்படி சுயத்தை இழக்க முடியும் என்று கேட்டது. ‘Return to Innocence'க்குப் பதில் 'Growth-to- Goodness' என்ற கருத்தை வைத்தது. இக்கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் பலகாலமாக Developmental Psychologyக்கும் Transpersonal Psychologyக்கும் உள்ள உரசலைத் தீர்க்கலாம்.

அதே போல் நவினத்துவம் Trans-Rational தன்மைகள் அனைத்தையுமே Pre-Rationalஆக சுருக்க நினைத்தது. ஏன் என்றால் Trans-Rational, Pre-Rational இரண்டுமே *Non*-Rational. நவீனத்துவத்திற்க்கும் Rationalityக்கும் உள்ள உறவு தான் நமக்குத் தெரியுமே. தனிப்பட்ட காரணங்கள் தவிர பிரமிளுக்கும் சுராவுக்கும் இருந்த இறுக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஜெயமோகன் தனக்கும் சுராவுக்கும் நடந்த சில உரசல்களைப் பற்றி ‘நினைவின் நதியில்' விரிவாக எழுகியுள்ளார். இதே போல் பல உதாரணங்களைக் கூறலாம்.

Trans-Rationalயை நான் எதற்கு நம்ப வேண்டும்? அனுபவ வாதத்தில், புற வயமாக (Empirically) இதை நிரூபிக்க முடியுமா என்று கேட்கலாம்.

இதற்கும் அறிவியல் பற்றிய நமது சுருங்கிய புரிதல்கள் தான் காரணம்.

தாமஸ் குன் (Thomas Kuhn) 'The Structure of Scientific Revolution' என்ற புத்தகத்தை எழுதினார். அதைப் பற்றி ஒவ்வொருவரும் அவரவர்கள் விருப்பத்திற்கேற்க விளக்கம் கொடுத்தார்கள். ‘Paradigm', Injunction', 'Exemplar' அது இது என்று தங்களுக்கு என்ன தோன்றியதோ தங்கள் நம்பிக்கைக்கு எது ஏதுவாக உள்ளதோ அதைத்தான் அதையேத்தான் குன் கூறினார் என்றார்கள். அறிவியல் ஒருவித சமூகக் கட்டுமானம், அறிவியல் அடிப்படையான உண்மைகள் எதையும் அளிக்கவில்லை.. உண்மைகள் இதுவாக இருக்கக்கூடும் என்ற ஒரு ஊகத்தயே, Interpretationயே தான் அளிக்கின்றன என்றும்.. அறிவியலை ‘paradigms' தான் ஆள்கின்றன, 'paradigms' தான் அறிவியலுக்கு உருவத்தயும் உள் அடக்கத்தையும் அளிக்கின்றன. உங்களுக்கு ஒரு ‘paradigm' பிடிக்கவில்லை என்றால் சட்டை பேண்ட் மாத்துவது போல் ஒரு 'paradigm'இல் இருந்து இன்னொரு ‘paradigm'க்கு மாறலாம் (நீங்கள் மாத்துவது தங்கள் சட்டை பேண்ட் இல்லை..அறிவியலின் சட்டை பேண்ட் போன்றவற்றைப் பற்றிக் கவலைப் படாமல்!). இதிலுல்ல சில கருத்துக்கள் சிறிது காலம் கழித்து ‘பின் நவீனத்துவமாக' விஸ்வரூபம் எடுத்து வந்தது.

குன் அடிப்படையில் அறிவியலை பற்றிக் கூறுகையில் அறிவியலின் மூலாதாரமான சில பண்புகளை ‘Scientific Inquiry' மற்றும் ‘Three Strands of Valid Knowledge' என்று விளக்கினார். அவை:

1) Instrumental Injunction - இதைத் தான் paradigm, exemplar, practice ordinance மற்றும் பல சொற்களைக் கொண்டு குன் விளக்கினார். அதாவது ‘இதை நீ அறிய விரும்புகிறாய் என்றால், இதைச் செய்' (If you want to know this, Do this). இந்த உப்பு காப்பர் சல்பேட் தான் என்று தெரிந்து கொள்ள இந்த வேதவியல் பரிசோதனைகளைச் செய். இந்த நீர்ன் அடர்த்தியை அரிய இந்த பரிசோதனயைச் செய்.. என்பது போல்.

2) Direct apprehension - மேலே நீங்கள் செய்த இந்த பரிசோதனையின் விளைவு. அனுபவப் பூர்வமாக அறிந்த முடிவுகள்.

3) Communal confirmation - வந்த 'result' சரிதானா என்று உறுதி செய்ய உங்கள் வாத்தியாரிடமோ, லேப் அட்டெண்டரிடமோ சரிபார்த்துக் கொள்வது. (முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரை ஞாபகம் வருகிறது)

இவை ஒரு பள்ளி பாடசாலை ஆராய்ச்சியில் மட்டும் இல்லாமல் எல்லா வகை அறிவியல் ஆராய்ச்சிக்கும் பொதுவான ஒன்று. அறிவியலுக்கே பொதுவான ஒன்று என்று கூட கூறலாம்.

இவற்றை வைத்துக் கொண்டு ஆன்மீக அனுபத்தை Empiricalஆக நிரூபிக்க முடியுமா? இதிலும் ‘Empiricism' என்று நாம் எதை வரையரைக்கிறோம் என்பதில் தான் உள்ளது.



'Empiricism' என்பது ‘Dogma'க்களை நம்பாமல் அனுபவப் பூர்வமாக நாம் உணர்வது என்பது ஒரு விளக்கம்.



இதில் நாம் பொதுவாக கண்களால் காண்பவையே ‘Empirical' என்று எண்ணுகிறோம். அவை உண்மை தான். அது ‘Sensual Empiricism'. நாம் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது மற்ற பல. ‘Eye of the Flesh'. அனால் நாம் அதோடு நிறுத்திக் கொள்கிறோம். அதில் தான் பிரச்சனையே.


இது தான் Empiricism என்று நாம் எடுத்துக் கொண்டால் Imaginary number 'i'யை Empiricalஆக நாம் நிரூபிக்க முடியுமா? அவ்வள்வு ஏன் -1 போன்ற ஒரு negative numberயை புற உலகில் நம்மால் எங்காவது காண முடியுமா? இயற்பியலில் இருந்து கணிதம் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பலவித குறியிடுகள், சின்னங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? ஒரு கணித வல்லுணர்க்கோ ஒரு இயற்பியல் விஞ்ஞானிக்கோ இந்த குறியிடுகளும், சின்னங்களும் ஒரு அழகான சித்திரத்தையே அளிக்கின்றன. இவற்றை நம்மால் ‘Eye of the Flesh'யை உபயோகித்து எங்கும் காண முடியாது. இவை மனங்களிலேயே எழுகின்றன. இவை ‘Mental Empiricism'. 'Eye of the Mind'. தருக்கம், கணிதம், தத்துவம், Semiotics போன்ற பலவும் இதில் இருந்தே எழுகின்றன.

அதே போல் ‘Supra Mental Empiricism'.( ஒரு oxymoron போலத் தோன்றலாம்). அல்லது ‘Eye of the Spirit'. ஆன்மீக அனுபவத்தை புரிந்து கொள்ள இதில் தான் முடியும். வார்த்தைகளால் அதைப் பற்றி ஒரு ஒரு வித வர்ணனை வேண்டுமானால் கொடுக்க முடியுமே தவிர அதை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. அதாவது 'SupraMental' அனுபவத்தை ‘Mental Empiricism/‘Eye of the Mind'ல் இருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது. 'Eye of the Spirit'இல் இருந்தே முடியும். ‘Contemplation' செய்து நாம் நம் அடியாழத்தில் உணரும் ஒன்றை ஒரு 'Mental Plane'ல் இருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது.

கடைசியில் ஒழுங்காக பதில் சொல்லாமல் டபாய்க்கிறாயா நீ என்று கேட்கலாம். உனக்கு எப்படித் தெரியும்? நீ என்ன கண்டாயா என்றும் கேட்கலாம். தாமஸ் குன்னின் Three Strands தான் நினைவுக்கு வருகிறது.

1) Instrumental Injunction [இதை நீ அறிய விரும்புகிறாய் என்றால், இதைச் செய் If you want to know this, Do this] - பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து விபாஸனா வரை , சூஃபி தியான முறைகளில் இருந்து கிருஸ்த்துவ கூட்டுவழிபாடுகள் வரை பல வழிமுறைகள்.

2) Direct apprehension - தமக்கு சரியானது என்ற பாதை ஒன்றை தட்டுத் தடுமாறி உள்ளுணர்வின் உதவியோடு இனம்கண்டு அதில் பயணிப்பது.
ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கி உணர்வது.

3) Communal confirmation - உணர்ந்த அனுபவத்தை தன் குருவிடமோ தன் சங்கத்திடமோ (Commune அல்லது Sangha) பகிர்தல். மேலும் பயணித்தல்.

*-*-*

இவ்வகை 'அறிவியல், மதம், ஆன்மீகம்' போன்றவற்றைப் பற்றிய நம் பொத்தாம் பொதுவான எண்ணங்கள், ‘Empiricism' பற்றிய நாம் வைத்திருந்த புரிதல்கள் மற்றும் ‘Pre/Trans Fallacy' போன்றவைகளே பெரும் குழப்பங்களை பல்வேறு துறைகளில் ஏற்படுத்தின. ஃப்ராய்ட் ஆன்மீக அனுபவத்தை ‘Regression to Infantile' என்று சுருக்கியது... யூங் Mythology துணைக்கொண்டு Mysticismதுக்கு புதுவர்ணம் கொடுத்து மீண்டும் கொடி ஏற்றியது... காப்ரா ஆன்மீகத்தையும், Mysticismதயும் ‘Mental' empiricismத்தின் துணைக்கொண்டு உள்வாங்க நினைத்து Physicsயை Pseudo-Physics ஆக தேய்வுறச்செய்தது ...ராமசந்திரன் 'Sensory empiricism'ன் துணைக்கொண்டு அதை மேலும் ‘Neuronal Fireworks'ஆக சுருக்க நினைத்தது..இப்படி மேலும் பல சுருக்கங்கள், ஏற்றங்கள்.

Temporal Lobes நடக்கும் Neuronal Fireworks ஏன் ஆன்மீக அனுபவம் என்று சொல்லப்படும் ஒன்றுக்கு காரணமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். இது மறுபடியும் ஆப்பிள் பழக் கதைக்கே நம்மைக் கொண்டு செல்கிறது.

வில்பர் இதை அழகாக விளக்குகிறார். இது அடுத்த பதிவில் Wilber Maps மற்றும் AQAL பற்றிச் சொல்லும் பொழுது இன்னும் விரிவாகப் புரியும். இப்போதைக்கு இது. உதாரணத்துக்கு Polygraph(Lie Detector) டெஸ்ட்டை எடுத்துக் கொள்வோம். நமது Galvanic Skin Response யைக் கொண்டு நாம் பொய் சொல்கிறோமா என்று ஓரளவுக்குக் கண்டுபிடிக்கலாம்.Polygraphயை நாம் ஏமாற்றவும் முடியும். அதை விட்டுவிடுவோம்.

நாம் பொய் சொல்வதால் நமது Galvanic Skin Response எகிறுகிறதா? இல்லை Galvanic Skin Response எகிறுகிறதால் நாம் பொய் சொல்கிறோமா? ராமசந்திரனின் தருக்கத்தை இங்கு உபயோகித்தால் ‘பொய்' என்ற ஒன்றே கிடையாது, இருப்பதெல்லாம் வெறும் ‘Galvanic Skin Response' தான்.

அதாவது பரவாயில்லை. Galvanic Skin Responseக்கு நமது 'Sexual Arousal' உடனும் தொடர்ப்பு உள்ளது. நாம் Arouse ஆவதால் Galvanic Skin Response எகிறுகிறதா? இல்லை Galvanic Skin Response எகிறுகிறதால் நாம் Arouse ஆகிறோமா?

இங்கும் ராமசந்திரனின் தருக்கத்தை உபயோகித்தால் ‘Sexual Arousal' என்ற ஒன்றே கிடையாதா?

அல்லது கிடையுமா?

இருப்பதெல்லாம் வெறும் ‘Galvanic Skin Response' தானோ?

*-*-*

வில்பர் இதை Causationயையும் Correlationயையும் குழப்பிக் கொள்வதால் வரும் வினை என்று சொல்கிறார்.ஆன்மீக அனுபவத்துக்கும் Temporal Lobesல் நடக்கும் தீப்பொறிகளுக்கும், Galvanic Skin Responseக்கும் Sexual Arousalக்கும் ‘Correlation' மட்டுமே உள்ளது. அதாவது Mindக்கும் Brainக்கும் அல்லது மனசுக்கும் மூளைக்கும் உடலுக்கும் இடையே இணைப்புகள், Correlationகளே உள்ளன. ஒரு EEG கருவியை நீண்ட நாட்களாக தியானத்தில் ஈடுபட்டிருந்த ஒரு புத்த பிக்குவின் மேல் பொறுத்தினால் 'Delta' அலைகளில் வித்தியாசம் தெரியும். ஒன்றை மற்றொன்றின் காரணியாகக்(Cause) கொள்வதே குழப்பத்திற்குக் காரணம். அப்படி சுருக்குவதும் ஒரு வித Reductionism.

(ராமசந்திரன் இதே போல் ‘Science of the Art' என்ற ஒரு கட்டுரையில் ஏன் நமக்கு பிகாஸோ ஓவியங்கள் பிடிக்கின்றன?..என்பது போல் பல நகைச்சுவைக் கருத்துக்களை தீவிரமாகக் கூறியுள்ளார். இதுவும் சுருக்குதலே. ஒருவித Metaphysical Blindness. பிக்காஸொவிலிருந்து பீத்தோவன் வரை அனைவரையுமே மூளைக்குள் அடைத்து நியுரான் மின்னல்களாக காட்டி விடலாம் என்ற ஒரு கனவு)

கென் வில்பருக்கும் காப்ராவுக்கும் நடந்த உரையாடலில் சிலதை வில்பர் தெளிவாக்குகிறார். ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே (தியானம், யோகம் உட்பட பல்வேறு வகைகள்) மட்டுமே உள்வாங்க முடியும்.தத்துவ விவாதத்தால் முடியாது. ஒரு பொதுப் புரிதலை மட்டுமே அவை உருவாக்க முடியும். அதே போல் கலை இலக்கியத்தாலும் முடியாது. அவைகளில் ஈடுபடுவது ஓர் ஆரம்பமே. சுயமிழத்தல் போன்ற transient, fleeting நிகழுவுகளே அதில் நிகழ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை ஒரு முக்கிய ஆரம்பமாக அமையலாம்.

அதே போல் ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கும் பல்வெறு நிலைகளை ஒரு ‘Spectrum' போலவே வில்பர் பார்க்கிறார். இங்கே நாம் இதை பொதுவாக இரட்டை நிலைகளிலேயே பார்க்கிறோம். சுவிட்சு போட்டால் லைட் எரிவதைப் போல் தியானம் செய்து கொண்டே இருக்கும் போது திடீரென முகம் பிரகாசம் ஆகி ஞானடைந்து பின்னால் ஒளிவட்டம் வந்து ரமணரைப் போல் மாறாபுன்னகையோடு இருப்போம் என்பதைப் போல் அன்றி ஒரு வித Spectrum போலவே நம் அனுபவங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. அதே போல் இது ஏணிப் படிகள் போன்ற 'rigid' ஆன structure/hierarchy கொண்டதும் அல்ல. அலைகளைப் போல். ஆங்கிலத்தில் Flex-Flow என்று சொல்வார்கள்.

இதை விட முக்கியமாக ஆன்மீக அனுபவம் எவருக்கும் எந்த நிலையிலும் ஏற்படலாம் என்று சொல்கிறார். என்னடா ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே மட்டுமே உள்வாங்க முடியும் என்று கூறி விட்டு இப்படி முன்னுக்குப் பின் முரணாகபேசுகிறாரே வில்பர் என்று கேட்கலாம். ஆன்மீக அனுபவம் என்பதும் அனுபத்தை 'செரித்து, 'உள்வாங்கி' முன்னேறுவதும் ஒன்றல்ல. அனுபவம் மின்னல் போல் தான். அந்த சுவிட்சு போட்டால் எரியம் பல்பு போல்தான். திடீரென்று தோன்றி மறையும் fleeting experience. அது எவருக்கும் ஏற்படலாம். இயற்கைக் காட்சியை காணும் போது திடீரென் தோன்றி மறையலாம். நம் சுயம் பெருவெளியில் கலப்பதை ஒரு ஷணத்தில் நாம் உணரலாம். இது Nature Mysticism. இல்லை ஒரு கூட்டு வழிபாட்டின் போது எல்லையில்லா கருணை நம் மனதை ஆட்கொள்வதை உணரலாம். உணராமலும் போகலாம். இது Deity mysticism. அதே போல் அனெஸ்தீசியா dosage அதிகமானால்.... கஞ்சா மற்றும் போதை மருந்துகள் உட்கொண்டாலும் சிலவேலைகளில் (Politically Incorrectஆக இருந்தாலும் கூட) உணரலாம். ஒரு Crisis of Faithஇன் போது, மிகுந்த மன இருக்கத்தின் போது... ஏன் ஒருவர் மிகமிக அற்புதமாக கிட்டார் வாசிக்கும் போது சங்கீகத் கச்சேரியில் தன்னை இழந்து ஒருவர் பாடும் போது, கலைஇலக்கியதில் ஈடுபடும் போது.. ஏன் ஒரு கிரிக்கெட் வீரர் அற்புதமாக் விளையாடும் போது ... ஒருவர் மலை ஏறும் போது கூட ஏற்படலாம். அவற்க்கு Flow / Optimal experience என்று உளவியலில் பெயர். இவையும் ஆன்மீக அனுபவங்கள் தான். வில்பரை பொருத்தவரை எந்த ஒரு அனுபவம் நம் சுயத்தின் வேலிகளை விரிவடையச்செய்கிறதோ அவை அனைத்துமே ஆன்மீக அனுபவங்கள் தான். அவற்றின் Intensity/Natureயை பொறுத்து அவை Spectrumஇல் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

ஆனால் இவை காற்றுப் போல் transient/fleeting அனுபவங்கள். ஒருவித பயிற்சி மற்றும் தியானம், யோகம் மற்றும் Contemplative practice இல்லாமல் இவை permanent traits ஆகாது. Gross, Psychic, Subtle, Causal என்று போகும் பாதை Non-Dual வரை. அதுவரையில் விரிவாகிவந்த வேலிகள் Non-Dualல் இல்லாமல் போகின்றன. இவை எல்லாம் வெறும் Methphysical Speculation அல்ல. தாமஸ் குன்னின் கூற்றுப்படி ஒரு செயலை செய்து(Instrumental Injunction) ஒன்றைக் கண்டடைந்து(Direct apprehension) அதை அத்துறையில் இருக்கும் அறிஞர்களிடம் பகிர்ந்து பரிசீலித்த பின்னரே அவைகள் ஏற்கப்பருகின்றன. Psychic, Subtle, Causal, Non Dual என்பதை Laya Samadhi, Savikalpa Samadhi, Nirvikalpa Samadhi, Sahaja Samadhi என்றும் பலவித Koshaங்களைக் கொண்டும் இந்து மற்றும் புத்த மதங்களிலும் Nature Mysticism, Deity Mysticism, Soul mysticism மற்றும் Spirit என்று கிருஸ்துவத்திலும் கூறப்படுகின்றன.

இவை பற்றியும் Waves, Streams, States பற்றியும் மற்றொரு பதிவில் பார்ப்போம். இதில் முக்கியமானது இதுதான். இந்த அனுபவங்கள் எல்லாம் Fleeting என்பதும் அதே போல் ஒருவித பயிற்சி இல்லாமல் இவற்றை permanent traits ஆக்க முடியாது என்பதும் ஆன்மீக அனுபவம் என்பதை விட அதை உள்வாங்கி செரித்துக் கொள்வதே முக்கியம். அதே போல் இது எந்த நிலையில் இருப்பவருக்கும் மின்னல் போல் தோன்றி மறையலாம். Howard Gardner என்ற உளவியல் அறிஞர் ‘Multiple Intelligence Theory' என்ற ஒன்றை முன்வைத்தார். அதை கென் வில்பர் கொஞ்சம் செரிவாகினார். அறிவு பல்வேறு Streamகளாக(Logico-Mathematical, Cognitive, Aesthetic, Spatial,Kinesthetic, Moral, InterPersonal, Intrapersonal, Spiritual etc..) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வளர்ந்து கொண்டே போகின்றன. Cognitive Development மற்றும் Aesthetic Development அதிகமாக இருக்கும் ஒருவனுக்கு Moral Development கம்மியாக இருக்கலாம். உதாரணம் பிகாஸோ, பால் காகின், மரியா வர்கோஸ் ஜ்யோஸா. அதே போல் Logico-Mathematical streamல் அதிக முன்னேற்றம் உடையவர்கள் Interpersonal மற்றும் Kinestheticல் மோசமாக இருக்கலாம். உ.ம். John Nash. இவை பொது விதிகள் அல்ல. தன்மைக்கேற்ப மாறுபடும். அனைத்து சாத்தியக்கூறுகளும் இதில் வரலாம். ஒரு துறையில் தீவிரமாக செயல்படுவதிற்கும் மற்றோன்றை வெறுப்பதற்க்கும் இதுவே காரணம்.

இது ஆன்மீகத்துக்கும் பொருந்தும். Spiritual development அதிகமாக (அதிகம் என்பதை Relativeஆகவே பயன்படுத்துகிறேன்) உள்ள ஒருவரிடம், ஒரு துறவியிடம் கூட Moral Developmentஒ அல்லது InterPersonal Developmentஓ வளர்ச்சியடையாமல், இன்னும் Evolve ஆகாமல் இருக்கலாம். கார்லோஸ் காஸ்டனேடா (Carlos Castaneda) புஸ்தகங்களில் வரும் Don Juan, மற்றும் Rasputin, Osho போன்றவர்கள் உதாரணம். செக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 'சில' சாமியார்களும் இந்த எல்லைக்குல் வரலாம். இவர்கள் Psychic levelல் அகப்பட்டு அதற்கு அடுத்த ‘Subtle'க்கு நகர முடியாமல் சிறைப்பட்டவர்கள்.

அதே போல் ஒரு Egocentric levelல் இருக்கும் ஒருவன் ஆன்மீக அனுபவம் அடைந்தால் அதை Egocentric values இன் வாயிலாகவே Interpret செய்வான். ஒரு Ethnocentric levelல் இருக்கும் ஒருவன் ஆன்மீக அனுபவம் அடைந்தால் அதை Ethnocentric valuesஇன் வாயிலாகவே புரிந்துகொள்வான். சிறந்த உதாரணம் இன்று நம் கண் முன்னே நடக்கும் மதவாத போராட்டங்கள்.

இதில் பின் நவினத்துவ கூறுகள் சிலவற்றை பார்க்கலாம். நமது அனுபவங்களை நாம் பரிதாபமாக உள்வாங்கிக் கொள்வது மட்டும் இல்லை. அதை நாம் தொடர்ந்து Interpret செய்து கொண்டும் அதற்கு அர்த்தங்கள் அளித்துக் கொண்டும் இருக்கிறோம். (Reality is not innocently perceived but actively interpreted and co-constructed).

இது ஏன் முக்கியம்? ஆன்மீக அனுபவத்தைச் சுற்றி உள்ள பற்பல ஒளிவட்டங்களை இது நீக்குகிறது. ஒரு serial killer, ஒரு ஏமாற்றுக்காரன், ஒரு சுயநலவாதி, ஒரு paedophile, ஒரு போத்திவேலு பண்டாரம்(ஏழாம் உலகம்) மாதிரியானவர்கள் கூட ஆன்மீக அனுபவத்தை (மனம் திருந்தி அல்ல. அவர்கள் அப்போது இருக்கும் நிலைகளில் இருந்தே) அடைய வாய்ப்புள்ளது என்று சொல்கிறது.

இது ஆன்மீக ஈடுபாடு உடையவர்களிடத்தே மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் Streams of Development ஒரு வித 'Center of Gravity'யை தாண்டிய உடன் தான் இந்த Fleeting Transient Traits / Experience ஒரு வித Permananceய் நோக்கி நகர்கிறது என்றும் இது தொடர் பயிற்சியினால் தான் சாத்தியம் என்றும் சில முக்கியமான Streamகள் ஆன Cognitive, Moral, Interpersonal, Intrapersonal, Spiritual போன்றவை ஒருவரினுள் ஓர் அளவைத் தாண்டியவுடன் தான் ஆன்மீக அனுபவத்தை ஒருவரால் உள்வாங்கி செரித்து மேல்நோக்கி பயனிக்க முடியும் என்றும் கூறுவதால் இவற்றை பற்றி நாம் கொஞ்சம் யோசித்து ஆன்மீகம் குறித்த நம் பழைய கருத்துக்களை விவாதித்து மறுஆக்கம் செய்வோம்.

இதையே மேற்கொண்டு ஒரு விவாத தளத்தில் எடுத்துக் கொண்டால் அறிவியல் ஆன்மீகம் மதம் மற்றும் நவீனத்துவம்/பின்-நவீனத்துவம் குறித்த பல வேறுபாடுகளை நாம் சிறிது தளர்த்த முடியும்.

அப்படி செய்வதே நல்லது. அதுவே சங்கரர், புத்தரில் இருந்து ரமணர் வரை, அரவிந்தரில் இருந்து கிருஷ்ணமூர்த்திவரை வரை, பிளாடினஸில் இருந்து ஷெல்லிங் வரை, தல்ஸ்த்தாயில் இருந்து கசான்ஸாகிஸ் வரையிலான முதியோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இவையே இன்றைய நம் சூழலில் காணப்படும் அதீத மோதல்களையும், குழுமனற்பான்மையையும் கொஞ்சம் தளரச்செய்யும்.

இதுவரை சொன்ன அனைத்துமே பொய்கள் தான். Non-Dual/Sahaja Samadhi/Spirit நிலையில் இருந்து பார்க்கும் பொழுது. அந்த ஒரு Absolute நிலையில் இந்த Relative Reality அர்த்தம் இழக்கிறது. பிறகு எதற்கு இத்தனை வியாக்கியாணம்?

Relative Realityல் தான் நாம் உலாவிக் கொண்டும் தத்துவங்களை எழுப்பிக் கொண்டு உள்ளோம். அதைப் பற்றிய புரிதலும் அவசியமே.

இது போல் ஆன்மீகத்துக்கு இடம் சுட்டி பொருள் விளக்கம் தருவது பலருக்கு உவப்பானதாக இருக்காது. எனக்கும் தான். ஆனால் நம் சூழலில் உள்ள புரிதல்களைக் கொஞ்சம் செரிவாக்க, ஒருவித விவாதத்திற்கான தளத்தை உருவாக்க இது உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. ஆன்மீகம், மதம் பற்றி கவித்துவமான நடையிலும் எழுதலாம். வேண்டுமென்றே தான் இந்த மாதிரி ஒரு உணர்ச்சியற்ற நடையை தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் இப்பதிவுக்கு இந்த நடையே சரி என்று பட்டது.

இன்று இது போன்ற ஒரு Integral Approachக்குக்கான தேவை தான் என்ன? ஒரு Knowledge Society/Information Societyஇல் அறிவுத்துறைகளே அதிகார மையங்களாக மாறுவதற்கான சந்தர்பங்கள் வலுவாக உள்ளன. அறிவுத்துறைகள் இது போன்ற சுருக்குதல்கலால் பிளவுபட்டு binary oppositionகளாகவே உள்ளன. அந்த வகை Reductionist, Fragmented உண்மைகளே மாறாத்தத்துவங்களாக, அமைப்புளாக நம்மை நசுக்குகின்றன. நேற்று உளவியலில் இருந்த இந்த சுருக்குதல்தன்மை இன்று Economicsக்குள் புகுந்துள்ளது. Economicsஓடு Behaviourismமும் கைக்கோர்த்து Behavioural Economicsஆக இன்று பல அதிசியத்தக்க ஆராய்சிகளை செய்து வருகிறது. முதல் தடவை படிக்க பிரமிக்கச் செய்கிறது. கொஞ்சம் யோசித்து மறுபடி படித்தால் அதன் போதாமைகள், சுருக்குதல்தன்மை போன்றவை புரிகின்றன. Tim Harfordன் ‘Logic of Life'இல் வரும் இந்தக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை வாசித்து கொஞ்சம் யோசியுங்கள்.

இதுவரை படித்தீர்கள் என்றால் மிக்க நன்றி. சிலர் பாதியிலேயே ஃபாஸிச மலம் நிலபிரபுவுத்திவ மதிப்பீடுடைய பார்பனீயக் குப்பை என்றோ Pseudo-Secular கயமைத்தனம் என்றோ வெறுத்து ஒதுக்கியிருக்கலாம். எதற்கு இந்த மாதிரி பிளவுபடா உண்மை பற்றிய கனவுகள்? ஒரு வகையில் இவை totalitarianism தானே என்று கேட்கலாம்? அது போன்ற totalitarian கனவுகள் தானே perennial philosophy ஆக நம் மக்களை நசுக்கியது? அவை தானே தடம் மாறி ஹிட்லரிலும் மாவோவிலும் ஸ்டாலினிலும் புஷ்ஷிலும் முடிந்தது? ஏன் இன்னமும் இந்த , பிளவுபடா உண்மைக்கான கனவு? எதற்க்காக அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்தத்தைக் கற்பிக்கத் துடிக்கும் பேராசை?

ஏன் என்றால் 'Man is condemned for meaning'. Condemned to find big picture.

Big picture, Grand narrative எல்லாம் கூடாது என்று கூறும் பின் நவீனத்துவம் கூட ஒரு Big pictureயையே அளிக்கிறது. Big picture கூடாது என்ற ஒரு Big pictureயை அளிக்கிறது. Grand Narratives கூடாது என்ற Grand Narrativeயையே அளிக்கிறது. Hierarchy, Absolute values கூடாது என்ற ஒரு hierarchyயை, valuesயை அளிக்கிறது.

நவீனத்துவம், பின் நவீனத்துவம் மற்றும் Perennial Philosophy போன்றவற்றைப் பற்றி கென் வில்பர் என்ன கூறுகிறார் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

*-*-*

அன்றாட சலிப்புகளினிடையே ஊடாடும் நம் வாழ்க்கைக்கு இவையே வர்ணங்க்ளை அளிக்கின்றன . பூங்காக்களில் உலாவுவதை விட காட்டில் தேடி அலைவதே நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது.




(பி.கு: அதிகப்படியான ஆங்கிலக் கலப்பு தமிழில் என் போதாமைகளினாலேயே. அவற்றுக்கு கலைச்சொற்கள் என்னவென்று சொன்னால் மிக்க உதவியாக இருக்கும்)

Tuesday, June 3, 2008

புல்வெளி

அப்போ நான் எட்டாங்கிளாஸ். புது ஸ்கூலில் சேர்த்திருந்தார்கள். இரண்டு மணிக்கே ஸ்கூல் முடிந்து விடுவதால் சும்மா ஜாலியாக தூங்கிக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருந்த என்னைப் போய் பக்கத்தில் உள்ள ஒரு டென்னிஸ் கிளாஸில் என் பெற்றோர் சேர்த்திருந்தார்கள். நடுத்தர குடும்பமான எங்களுக்கு டென்னீஸெல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான். என் cousin மாவட்ட அளவு கால்பந்து வீரன். அதனால் ஒரு கெத்துக்காக நானும் வேண்டா வெருப்பாக போய் வந்தேன்.


டென்னிஸ் கோச் மைதானத்தைச் சுற்றி பத்திருவது தடவை ஓட வைப்பார். தினமும் 10 நிமிடம் டென்னிஸும் 40 நிமிடம் ஓட்டமும்! என்னாடாப்பா இது, டென்னிஸ் கோச்சிங்கா இல்ல ஓட்டப்பந்தயத்துக்குக் கோச்சிங்கான்னு புறியாமல் செம கடுப்பில் ஓடிக்கொண்டு இருந்தேன்.

அப்பொழுது பெயர் தெரியாத சொகுசு காரில் டென்னிஸ் மட்டை உயரமே இருந்த ஒரு சிறுவன் வந்திறங்கினான். இன்னும் தூக்கம் கலையாத முகத்துடன் மட்டையயும் தண்ணி பாட்டிலயும் தரதரவென இழுத்துக் கொண்டு வந்தான். அவன் வரும் விதத்தைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்து அதை கோச்சாரும் பார்த்துத் தொலைக்கவே எனக்கு அன்று நல்ல பந்துகளில் இருந்து குழி விழுந்த மொக்கை பந்துகளை பிரிக்கும் வேளை கொடுக்கப்பட்டது.

பிறகு அவன் ஃபோர்த்து கிரேடில் மாற்று-முறைக் கல்விக்குப் பெயர் போன உயர்ரகப் பள்ளியில் படிக்கிறான் என்றும் டென்னிஸ் கிளாஸில் அவன் தான் ஆகப்பெரிய ஜோக்கர்க்கோமாளி என்றும் அறிந்து கொண்டேன்.

சீருடை அணிந்த காரின் ஓட்டுனர் உலுக்குஉலுக்கு என்று உலுக்கின பிறகுதான் துயில் எழுவான். அதன் பின் அரைத் தூக்கத்தில்லேயே warm-up செய்து அரைத் தூக்கத்தில்லேயே jogging முடித்து அ.தூக்கத்தில்லேயே forehand/backhand பயிற்சி முடித்து அ.தூக்கத்தில்லேயே volleyயும் முடித்து அ.தூக்கத்தில்லேயே கோச் கொடுக்கும் தண்டனையையும் நிறைவேற்றி விட்டுக் கிளம்புவான்.

ஒருநாளும் அவன் யாருடனும் பேசிப் பார்த்ததில்லை.

நான் அன்று பயிற்சி முடித்து கிளம்பத் தயாராக இருந்தேன். பயிற்சி முடித்ததும் அடுத்த வினாடியே இன்னும் கொஞ்சநேரம் ஓடகீட கோச் சொல்லிவிடுவாரோ என்று பயத்தில் ஒழுங்காக கிளம்பி விடும் நான் அன்று என் போதாத நேரத்தால் நெட் அருகே நின்று கொண்டு மற்றவர்கள் பயிற்சி செய்வதை பராக்குப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அரைத்தூக்கவாசி தான் விளையாடிக் கொண்டு இருந்தான். Marker போடும் ஒவ்வோரு பந்தையும் விளாசிக் கொண்டு இருந்தான். அவை அனைத்தும் பக்கத்துக் கோர்ட்டிலேயே விழுந்துக் கொண்டு இருந்தது. கடுப்பாகிக் போன Marker இன்னும் வேகவேகமாக அடுத்தடுத்து பந்துகளை வீசினார். அவனும் சளராமல் பந்தை பக்கத்து கோர்ட்டுக்கே அனுப்பிக் கொண்டு இருந்தான். இந்த அலகிலா விளையாட்டை நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

திடீரென அவனது டென்னிஸ் மட்டை கைத்தவறி பறத்து அந்த வேகத்தில் சுழன்று சரியாக என் மீது விழுந்தது. அடி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. ஆனால் இந்த தீடீர்த் தாக்குதலால் நிலை குலைந்த நான் தரையில் கிடந்தேன். பிறகு எம்பி நின்று சட்டையை உதறி நின்றபோது கோச் செமத்தியாக அ.தூவை வைதுக் கொண்டு இருந்தார். இஷ்டமில்லைனா வராதே... .. பாரு உன்னால் ஒருத்தனுக்கு அடி...வந்து எதுக்கு இப்படி எல்லார்க்கும் இம்சை கொடுக்குற.. என்று சொல்லிக்கொண்டே போனார். கோச்சிடம் அடியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லலாம் என்று நினைத்து ... இதை வைத்தே நாளை மட்டம் போடலாமே என்ற திடீர் ஞானோதயம் ஏற்பட நான் பேசாமல் இருந்தேன். அ.தூவை 10 ரவுண்ட் வெளி மைதானத்தில் ஓட கட்டளையிட்டார். வழக்கம் போல் அவன் எந்த பதிலும் பேசவில்லை.

சட்டென்று கோச்சார் என்னை கூப்பிட்டார். அடி கிடி பட்டிருந்தா நாளைக்கு ஒண்ணும் வரவேணாம்முன்னு சொல்லப் போறார் என்று எதிர்பார்த்துக்கொண்டே போனேன். அதான் போன பத்தியிலேயே போதாத காலம் என்று சொன்னேனே.. அப்படி சொல்லிவிட்டு எப்படி நான் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு போகலாம்? உன்னை எவன்டா Net கிட்ட நிக்க சொன்னான்...அதான் சிமெண்ட் பெஞ்சு இருக்குள்ள.. அங்க உக்காந்து பாக்குரதுக்கு உனக்கு என்ன வலிக்குதா என்று என்னையும் போட்டு வறுத்தெடுத்தார். விட்டால் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓட வேண்டும் போல் இருந்த என்னையும் அரைத்தூக்கவாசியோடு ஓட கட்டளையிட்டார்.


வெளி மைதானத்தைச் சுற்றி 10 ரவுண்டுகள். எனக்கு அப்படியே பொங்கிக் கொண்டு வந்த துக்கம் தொண்டயை அடைத்தது. அடி பட்டு விழுந்து கிடந்தவனிடம் கொஞ்சம் கூட கரிசனமாக பேசாமல் இப்படி ரவுண்டடிக்க விடுகிறார்களே என்று எண்ணி எண்ணி ஆத்திரமும் அழுகையும் மற்ற என்ன என்னவோ உணர்ச்சிகளும் வந்து கொண்டே இருந்தன. டேய் நான் உன்ன ஓடசொன்னனே..ஓடாம எண்ண பேன்னு நின்னிட்டு இருக்கே என்று கோச்சார் கத்த வந்த உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்தி வெளி மைதானத்தில் ஓடத் தொடங்கினேன்.

எனக்கு இந்த கதியை ஏற்படுத்திய எதிரி தூரத்தில் ஓடிக்கொண்டு இருந்தது. மூச்சைப் பிடித்து ஒடி வந்து அதன் பின் பக்கத்தில் ஒரு உதையையும் தலையில் ஒரு குட்டும் கொடுத்தேன். தூக்கத்திலிருந்து விழித்து என்னை பார்த்து சாரி என்றது. காலுடைந்த ஆடு ஒன்று ஓடுவதைப் போலவே இருந்தது அவன் ஓட்டம்.

மைதானத்தின் மறு ஓரத்தில் இருந்தோம். நான் அவனை பிடித்து இழுத்து நிறுத்தினேன். இந்த இடத்தில் நாம் இருப்பது கோச்சுக்குத் அங்கிருந்து தெரியாது. அதனால் இங்கு நாம் நடப்போம். மறு கோடியில் திரும்பவும் ஓடுவோம் என்று என் எட்டாங் கிளாஸ் குறுக்குபுத்தியை ஃபோர்த் கிரேடுக்கு புகட்ட முயன்றேன்.

அவன் ஒரு கம்பிளிப்பூச்சிப் போல் வளைந்து வளைந்து நடத்து கொண்டிருந்தான். டேய் கோணக்காலா.. ஒழுங்கா நடக்க தெரியாதா உனக்கு என்று சீண்டியபடியே இருந்தேன்.திடீரென ஒரு இடத்தில் அவன் நின்றான். கீழே குனிந்து புல்லில் இருந்த என்னத்தயோ எடுத்தான். எதோ ஒரு சின்ன அழுக்கு காலி பாக்கெட். மிகச் சின்னதாக Pizzaவுடன் வரும் Chilly Flakes பாக்கெட் போல இருந்தது. அதன் மேல் இருந்த எழுத்துக்கள் அழிந்திருந்தன. ஒரு முழு நிமிடம் அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'டேய்..அத கீழப்போடுடா..அழுக்கு..‘ என்றேன்.


'இது என்னவென்று தெரியுமா' என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவன் பேசி நான் கேட்கும் முதன் வாக்கியம்.

'ஏதோ பாக்கெட்டா...நீ அதை கீழ போடு..நேரம் ஆது.. கோச் பாத்தா அவ்ளோதான்‘

'இது Grass' என்றான்.

'ஆங்...என்னாது?'

‘Grass'

'டெய்...நீ கோணக்காலு தூங்குமூஞ்சின்னு தான் நினைச்சேன்.. நீ லூசு கூடவா..பாக்கெட்ட போய் Grassனு சொல்ற... புல்லுல்ல இருந்து எடுத்தா அதுவும் புல்லா?..அது செரி...மவனே இன்னும் ஒம்போது ரவுண்ட் போனும்... உன் ஸ்கூல்ல எக்ஸாம் கிக்ஸாம்லாம் கிடையாது.. எனக்கு நாளைக்கு பிஸிக்ஸ் டெஸ்ட்டு....” என்று அவனை திட்டி விட்டு ஓடத்தொடங்கினேன்.

அடுத்த நாள் கால் வலி என்று பிஸிக்ஸ் டெஸ்ட்டுக்கும் அப்படியே டென்னிஸ் கிளாசுக்கும் மட்டம் போட்டேன். படிப்பு தான் முக்கியம் என்றும் டென்னிஸுக்கெல்லாம் போய் படிப்பைக் கெடுத்துக் கொள்ள கூடாது என்றும் இனிமேல் டென்னிஸ் கின்னிஸெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் என்றும் அப்பா சொன்னார். நானும் கண்ணீர் வர சம்மதித்து பிறகு மூன்றில் இருந்து அப்பா வரும் ஆறு மணி வரை வரும் உலக மகா யுத்தமான WWF Wrestlingயையும் பார்த்து விட முடியுமென்ற நினைவு வந்து சந்தோஷம் இரு மடங்காக்கியது.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பொறியியல் முதலாம் ஆண்டு இறுதியில் T-Joint/V-Joint/புறாவால்-Joint என்று ஏதேதோ 'Joint' பற்றி Workshop வாத்தியார் சொல்லும் பொழுதெல்லாம் பின்னால் எழும் சிரிப்பொலிகளினிடையே Grass-ன் அர்த்தத்தைக் கண்டடைந்தேன்.

பறக்கும் யானையும் தியானிக்கும் குரங்கும்...